சங்கத்தின் முக்கிய கோட்பாடுகள்

தேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின்  செயல்பாட்டில் உள்ள கொள்கை கோட்பாடுகள் சட்டதிட்டங்கள் ஒரு சிலவற்றை நிர்வாகிகள் பார்வைக்கு

தலைமையின் முக்கிய அறிவிப்பு
1) தனி மனித உரிமைகளை மனுரீதியாக பெற்று தருவது.

2) அனைத்து தரப்பு மக்களுக்கும்  உதவிகள் செய்வது.

3) அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து நல்ல காரியங்களும் சங்கத்தின் மூலமாக செய்து தரப்படும்.

4) சங்கத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.

5) மக்களுக்கான நீதியை மனுரீதியாக பெற்றுத் தரப்படும்.

6) மக்கள் அனைவருக்கும் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும்.

7) சட்டரீதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்யப்படும்.

8) நமது சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும்.

9) சங்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் அமைப்பு சாரா நல வாரியம் நமது சங்கத்தின் மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

10) நமது சங்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூபாய் 1000 வழங்கப்படும்.

11) ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நமது சங்கத்தின் துவக்க விழாவில் சிறப்பாக செயல்படும் சங்கத்தின் உறவுகளுக்கு சிறந்த சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் சிறந்த சமூக சேவகர் சேவரத்னா விருதுகள் இன்னும் பல விருதுகள் வழங்கப்படும்.

12) நமது மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் மூலமாக மினி வங்கி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்படும்.

13) முது சங்க உறவுகள் அனைவருக்கும் உண்டான முழுமையாக சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும்.

14) நமது சங்கத்தில் இணைந்துள்ள மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு உண்டான அங்கீகாரத்தை தனக்குத்தானே மீட்டு எடுக்கும் அதிகாரத்தை நமது சங்கத்தின் மூலமாக முழு அங்கீகாரம் அளிக்கப்படும்.



15) ஒரு சங்கத்தில் இணைந்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் ஓட்டுநர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நமது சங்கத்தின் சார்பாக அமைப்புசாரா நலவாரியம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.


16) நமது சங்கத்தின் உறவுகள் அனைவருக்கும் ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் நமது சங்கத்தின் தலைமை நேரடியாக தலையிட்டு பிரச்சினையை சரி செய்து கொடுக்கப்படும்.

17) நமது சங்கத்தின் உறவுகள் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் நமது சங்கத்தின் மூலமாக வழங்கப்படும்.

18) இரண்டு வருடமாக நமது சங்கத்தில் உண்மையாக பயணிக்கும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு வங்கியில் மூலமாக கடன் பெற்றுத் தரப்படும்.

19) நமது சங்கத்தில் இணைந்து செயல்படும் நிர்வாகிகள் அனைவருக்கும் நமது சங்கத்தின் தேசிய நிதியில் இருந்து மாநில பொறுப்பாளர்களின் ஒப்புதல் அளிக்கும் நிர்வாகிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் நிர்வாகிகளின் அணுகுமுறை செயல்பாடுகள் கணக்கெடுக்கப்பட்டு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

20) சங்கத்தில் இணைந்து செயல்படும் நிர்வாகிகள் எவராயினும் மது அருந்திவிட்டு எவ்வித பிரச்சனையில் சிக்கிக் கொண்டாலும் செய்தாலும் சங்கம் ஒருபோதும் தங்களுக்கு உறுதுணையாக ஒருபோதும் செயல்படாது.

21) நமது சங்கத்தில் இணைந்துள்ள நிர்வாகிகள் எவராயினும் மது அருந்திவிட்டு எந்த ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டாலும் ஒருபோதும் நமது சங்கத்தின் அடையாள அட்டையை பயன்படுத்தக்கூடாது.

22) நமது சங்கத்தின் சார்பாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியவர்களை பாதுகாப்பும் வகையில் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்படும்.

23) நமது சங்கத்தின் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் காப்பகம் ஏற்பாடு செய்து குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்போம்.


24) வரும் காலங்களில் நமது சங்கத்தின் சார்பாக பள்ளி கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

25) நமது சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும்.


நிர்வாக குழு

தற்பொழுது தேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம் சங்கத்தில் செயல்பாட்டில் உள்ள ஒரு சில கொள்கை கோட்பாடுகளை மட்டுமே தங்களுக்கு அறிவித்துள்ளோம் தாங்கள் சங்கத்தில் இணைந்தவுடன் தங்கள் பூர்த்தி செய்து அளிக்கப்படும் உறுப்பினர் படிவம் உறுதிமொழி படிவம் கொள்கை கோட்பாடுகள் படிவத்தில் மேலும் உள்ள அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் இவை அனைத்திற்கும் ஒப்புதல் அளித்து கையிருப்பு இடம் அனைவருக்கும் நமது சங்கத்தின் மூலமாக பொறுப்பு மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும் என்பதை தலைமையின் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்.